×

சூலப்புரம் கிராமமக்கள் புகார் பஸ் ஸ்டாண்டா? டூவீலர் ஸ்டாண்டா?

கம்பம், ஆக. 14: தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியாக கம்பம் உள்ளது. தமிழக, கேரள எல்லை பகுதியாக கம்பம் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் பஸ்கள் மற்றும் அரசு வாகனங்களை தவிர வேறு எந்த தனியார் வாகனங்களும் செல்ல போலீசார் தடை விதித்து இதற்கான அறிவிப்பு பலகையும் வைத்தனர். மேலும் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு அவ்வாறு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர்.

ஆனால், காவல்துறை உத்தரவையும் மீறி ஏராளமான டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நுழைவதால் அவ்வப்போது விபத்துகள் நடப்பதாக டிரைவர்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், ` தமிழகத்தில் பெரும்பாலான பஸ் நிலையங்களில் தனியார் வாகனங்கள் உள்ளே நுழைந்தால், உடனே போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதே போல் இங்கும் போலீசார் அனுமதில்லாமல் நுழையும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தால் தான் இதை முற்றிலும் தடுக்க முடியும்’ என்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா