×

மண் வளத்தைப் பாதிக்கும் சாலிமரங்கள் அகற்றப்படுமா?

பெரியகுளம், ஆக.14:  பெரியகுளம் அருகே கும்பக்கரை மற்றம் சோத்துப்பாறை வனப்பகுதியில் மண்வளத்தைப் பாதிக்கச் செய்யும் சாலி மரங்களை உடனடியாக அகற்ற  வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மரக்கன்றுகளை வளர்த்து அதிக மழைப்பொழிவு பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் முள்வகையைச் சேர்ந்த சாலிமரங்கள் வளர்த்துள்ளனர்.

வேலிப்பாதுகாப்பிற்காக அவற்றின் ஆபத்து தெரியாமல் இவற்றை நட்டுள்ளனர். மழையை ஈர்க்கும் தன்மை இல்லாமல் மாறாக நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சி மண்வளம் பாதிக்கச் செய்கிறது. கும்பக்கரை மற்றும் சோத்துப்பாறை வனங்களில் சில பகுதிகளில் இம்மரம் வளர்ந்துள்ளது.எனவே, வனத்துறை இவற்றை அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?