×

கம்பத்தில் மாவட்ட அளவில் யோகா போட்டி

கம்பம். ஆக. 14: கம்பத்தில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. தேனி மாவட்ட யோகா மற்றும் கம்பம் ரிஷி யோகா பயிற்சி மையமும் இணைந்து மாவட்ட அளவிலான யோகா போட்டிகளை நடத்தினர். விழாவிற்கு தேனி மாவட்ட யோகா சங்க தலைவர் காந்தவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஹைதர்அலி முன்னிலை வகித்தார். ரிஷி யோகா அறங்காவலர் ராஜேந்திரன்
வரவேற்றார்.

போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் பத்மாசனம், தனுராசனம், சர்வங்காசனம், புஜங்காசனம், சக்கராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. யோகா பயிற்சியாளர் ரவிராம் நன்றி கூறினார்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது