×

தமிழக- கேரள எல்லையில் கனமழை கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பந்தலூர்:  தமிழக- கேரள மாநில எல்லைப்பகுதியான வயநாடு மாவட்டம்  சுல்தான்பத்தேரி, கல்பட்டா, மானந்தவாடி,பனமரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தொடர்மழை பெய்து வருவதால் வயநாடு மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.மழை காரணமாக வயநாடு பகுதியில் வசிக்கும் மக்கள்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில்  பயிர் செய்யப்பட்டுள்ள நெல்,வாழை உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மழைவெள்ளத்தில் மூழ்கி சேதமாகியது.

வாகனங்களும் மழைநீரில் அடித்து  செல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பானசுறா சாகர் உள்ளிட்ட அணைகளில்  வெள்ளம் அதிகரித்து முன்னறிவிப்பின்றி அணைகளை திறந்து விடப்பட்டதால்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோர வீடுகள் பல இடிந்து விழுந்ததாக  கூறப்படுகிறது. தொடர்மழை பெய்து வருவதால் சுல்தான்பத்தேரி அருகே  முள்ளங்கொல்லி பஞ்சாயத்து பெருக்கலூர் பகுதியில் காவிரி ஆற்றின் கிளை ஆறான கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக கரையோர  மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.தொடர் மழை பெய்து வருவதால் வயநாடு  மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...