×

மோட்டார் வாகனச் சட்டம் நிறைவேற்றினால் அரசுப் போக்குவரத்துக்கழகம் இருக்காது

திருப்பூர்: மோட்டார்  வாகனச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசுப் போக்குவரத்துக் கழகம் இருக்காது  என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் சௌந்தரராசன்  கூறினார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே மரக்கடை சந்தில் அரசுப்  போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து  அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் சௌந்தரராசன் பேசியதாவது பொதுத்துறை நிறுவனமான அரசுப் போக்குவரத்துக் கழகத்தை  பாதுகாப்பது நமது கடமை.  கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக பொதுத்துறையை அழிக்க  வேண்டும் என்பது அரசின் திட்டமாக உள்ளது.

இது அரசியல் திட்டம். இந்த  அரசியலுக்கு எதிராக பொதுத்துறையை அழியவிட மாட்டோம் என நாம் போராட வேண்டும்.  மோட்டார் வாகனச்  சட்டத்திற்கு எதிராக கடந்த 7ம் தேதி வலுவான போராட்டம்  நடந்தது. இருப்பினும். இந்த சட்டத்தின் ஆபத்து பலருக்கு தெரியவில்லை. இந்த  சட்டம் நிறைவேற்றப்பட்டால் பொதுத்துறை போக்குவரத்தே இருக்காது. ஏற்கனவே  பீகார், மத்திய பிரதேசத்தில் இருந்த பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மோட்டார் வாகன சட்டத்தை  நிறைவேற்றாமல் போராடி தடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார், மண்டலத்  தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன்  மா.கம்யூ., மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், டெல்லியில் கட்டப்பட்டு வரும் ஹரிகிஷன் சிங் சுர்ஜித் பவன் நிதிக்கு ரூ.10  ஆயிரம் வழங்கப்பட்டது. அத்துடன் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையும் வசூலிக்கப்பட்டது.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...