×

மக்கள் வீடுகளில் முடக்கம் வால்பாறையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் இயல்பு  வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள  மலைப்பகுதிகளில் மழை அதிகம் பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையங்கள்  எச்சரிக்கை விடுத்திருந்ததால், நேற்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரி  வழக்கம் போல் செயல்பட்டது.

இரவு, பகலாக மழைபெய்து வருவதால் பொதுமக்கள் கடைகளுக்கு கூட சென்று வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சீதோஷண நிலை மாற்றம் காரணமாக இரவில் அதிகளவில் குளிர் வாட்டுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களின் போது குடிநீரை கொதிக்க வைத்து பருகும்படி நகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு