×

புதிய சம்பள ஒப்பந்தம்கோரி கோவையில் 5 என்.டி.சி மில்கள் முன் இன்று தொடர் ஆர்ப்பாட்டம்

கோவை: புதிய சம்பள ஒப்பந்தம்கோரி கோவையில் இன்று ஐந்து என்டிசி மில்கள் முன் தொடர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவை என்.டி.சி மில்களை சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள் ஆலோசனை கூட்டம் காட்டூர் ஏஐடியுசி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ராஜாமணி (எச்.எம்.எஸ்) தலைமை தாங்கினார். ஆறுமுகம், சிவசாமி (ஏஐடியுசி), தியாகராஜன், பழனிசாமி (எம்எல்எப்), விஜயகுமார் (அம்பேத்கர் யூனியன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்: 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் பதவிவகித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. என்டிசி மில் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த 31.5.2018 அன்றுடன் நிறைவடைந்து விட்டது. புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்றாமல் என்டிசி நிர்வாகம் காலம் தாழ்த்துகிறது. புதிய சம்பள ஒப்பந்தம் நிறைவேற்றக்கோரி கோவையில் உள்ள 5 என்டிசி ஆலைகள் முன் இன்று (செவ்வாய்) மாலை 3 மணிக்கு தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்துக்கு தலைமை தாங்குவோர் விவரம்: கம்போடியா மில் - ராஜாமணி (எச்.எம்.எஸ்.), பங்கஜா மில் - தியாகராஜன் (எம்எல்எப்), மனோகரன் (எச்எம்எஸ்), விஜயகுமார் (அம்பேத்கர் யூனியன்), முருகன் மில்ஸ் - பழனிசாமி (எம்எல்எப்), சண்முகம் (எச்எம்எஸ்), பூபதி (ஏஐடியுசி), சி.எஸ். அண்ட் டபிள்யூ மில் - சிவசாமி (ஏஐடியுசி), ஸ்ரீரங்கவிலாஸ் மில் - கோவிந்தசாமி (எம்எல்எப்), ஜெகநாதன் (ஏஐடியுசி), பால்ராஜ் (பிஎம்எஸ்), சுப்பிரமணியன் (எச்எம்எஸ்) ஆகியோர் ஆவர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு