×

பைக் மீது லாரி மோதி ஒருவர் சாவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே குருமந்தூர் கோபி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (59). இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது பைக்கில் சத்தி அருகே மூலக்கிணறு என்ற இடத்தில் தனது நண்பர் சந்திரனை பார்க்க சென்றுள்ளார். பின்னர் சந்திரனை பார்த்து விட்டு பைக்கில் சத்தி-கோபி மெயின் ரோட்டில் அரசூர் விவசாய கூட்டுறவு வங்கி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் பைக்கை ஓட்டிய பார்த்தீபனுக்கு தலையிலும், கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக பார்த்தீபன் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பார்த்தீபன் உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை