×

ராஜகாளியம்மன் கோயிலில் மஞ்சள் காப்பு சாற்றும் வைபவம்

திருப்புத்தூர், ஆக. 14: திருப்புத்தூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர உற்சவ விழாவையொட்டி நேற்று பெண்கள் மஞ்சள் அரைத்து வழிபாடு செய்தனர். திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு மஞ்சள் அரைத்து காப்பு சாற்றும் வைபவம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மஞ்சள் அரைத்தனர். மதியம் 1.00 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் கோர்க்கப்பட்டு, அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் ஆதித்திருத்தளி நாதர் ஆலயத்தில் மூலவரான சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதேபோல ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருவாடிப்பூர உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு உற்சவ ஆண்டாளுக்கு அபிஷேகம் நடைபெற்று சந்தகாப்பு சாத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்