×

ஸ்ரீலங்கா சுற்றுலாதுறையுடன் சபரி டிராவல்ஸ் ஒப்பந்தம்

காரைக்குடி, ஆக.14: காரைக்குடி சபரி டிராவல்ஸ் நிறுவன இயக்குநர் கோவிந்தராஜன் கூறுகையில், ‘‘காரைக்குடி சபரி டிராவல்ஸ் நிறுவனம் மாவட்டத்தில் முதல் விமான நிறுவனங்களின் நேரடி ஏஜென்ட் நிறுவனமாகவும், இந்திய சுற்றுலாத்துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் உள்ளது. 50 ஆண்டு காலமாக மக்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது ஸ்ரீலங்கன் சுற்றுலாத்துறையின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணம் செய்ய எங்கள் நிர்வாக இயக்குர் ஹரிஹரசுதன் அங்கு லங்கன் ஏர்வேஸ்சின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கன் ஹாலிடேஸ்வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இனி குறைந்த கட்டணத்தில் லங்காவிற்கு மதுரையில் இருந்து பயணம் செய்யலாம். இதன்படி ரூ.23600க்கு மூன்று நாட்கள் ஸ்ரீலங்காவில் சுற்றுலா செல்லலாம். இதில் விமான டிக்கெட், தங்குமிடம், முக்கிய சுற்றுலாதளங்களுக்கு அழைத்து செல்லுதல், விளக்கம் கூற கைடு, காலை சிற்றுண்டி, ஏர்போர்ட்டில் இருந்து பிக்அப் மற்றும் டிராப் என அனைத்தும் அடக்கம். தவிர ரூ.29,100க்கு 4 நாட்கள், ரூ. 31800க்கு 5 நாட்கள், ரூ.35200க்கு 6 நாட்கள் என பல சலுகைகள் உள்ளன. இச்சலுகை கட்டணத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் 31 வரை செல்லலாம். தவிர பல்வேறு நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்லும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்