×

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது வழக்கு

சிவகங்கை, ஆக. 14: சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதையடுத்து அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக செங்குளிப்பட்டி சவுந்திரபாண்டியன் மற்றும் 4 பேர் மீது மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோல் காடனேரியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக, இதே ஊரை சேர்ந்த சேர்ந்த ரகுநாதசிதம்பரம் மற்றும் 9 பேர் மீது மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக இதே ஊரை சேர்ந்த மதி (எ) சங்கரலிங்கம் மற்றும் 9 பேர் மீதும், சக்கந்தி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதாக கோமாளிபட்டியை சேர்ந்த வீரன் மற்றும் 9 பேர் மீதும் சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிராமசபை கூட்டத்திற்கு வரும் விஐபிக்கள் தரையிலே அமர வேண்டும்
கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தேசிய விடுமுறைகளில் நடத்தப்படுகிறது. இதன்படி ஜன.26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய 4 நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் இந்நாளில் கிராமசபை கூட்டம் கண்டிப்பாக நடைபெறும்.

இதுதவிர வேறு ஏதேனும் காரணங்களுக்காக கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் நினைத்தால், இந்த 4 நாட்கள் தவிர மற்ற தினங்களிலும் நடத்தலாம். அது சிறப்பு கிராமசபைக் கூட்டம் என்று அழைக்கப்படும். ஊராட்சித்  தலைவர் சிறப்பு கூட்டத்தை நடத்த மறுத்தால் கலெக்டரிடம் இது குறித்து விண்ணப்பிக்கலாம். கிராமசபைக் கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாயக்கூடத்திலோ, பொது இடத்திலோ நடத்தலாம். பல உட்கிராமங்கள் இருந்தால் ஒவ்வொரு முறையும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் நடத்தலாம். கிராமசபையில் அனைவரும் சமமாக அமர வேண்டும். இது சட்டம். இதை மாற்றவே கூடாது. பிரதமரே கிராம சபைக்கூட்டத்திற்கு வருவதாக இருந்தாலும் அவரும் தரையில்தான் அமர வேண்டும். கூட்டத்தை நடத்தாமல் எந்தவிதமான அறிவிப்பும் தராமல் தங்களுக்கு வேண்டியவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொய்யாக பதிவு செய்யக் கூடாது. 18 வயது நிரம்பிய அனைவரும் கிராமசபையில் கலந்து கொள்ளலாம். யாரையும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. கூறினால் அது சட்டப்படி குற்றமாகும். உங்கள் ஊர் கிராமசபையில் மட்டுமல்ல. பக்கத்து ஊர் கிராமசபையிலும் பங்கேற்கலாம். ஆனால் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். மக்கள் தொகை 500 என்றால் 50 பேர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

இதே போல் 3 ஆயிரம் பேருக்கு 100 பேரும், 10ஆயிரம் பேர் வரை 200பேரும், 10ஆயிரத்திற்கு மேல் என்றால் 300பேரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். எண்ணிக்கை குறைந்தால் கூட்டம் செல்லாது என்று கருதி ரத்து செய்யப்பட்டு வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராமசபையின் தலைவர். அவர் இல்லாவிட்டால் துணைத்தலைவர் தலைமை ஏற்கலாம். இருவரும் இல்லாவிட்டால் வார்டு உறுப்பினர் ஒருவர் தலைமை வகிக்கலாம்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாவிட்டால் பஞ்சாயத்து அலுவலர்கள் சபையை நடத்தலாம். ஆனால் அதில் மக்களில் ஒருவரைத் தலைமை வகிக்க தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கே தீர்மானம் நிறைவேற்ற முடியும். இது சட்டத்திற்கு உட்பட்டதாக, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனிநபர் உரிமை போன்றவற்றிற்கு எதிராக தீர்மானம் இயற்றக்கூடாது.
ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தீர்மானம் இயற்றலாம். இதற்கு தடை சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. சட்டமன்றம், நாடாளுமன்றம் இவற்றிற்கு இணையான அதிகாரம் கிராமசபைக்கு உண்டு. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். தீர்மானத்திற்கு காலவரம்பே இல்லை. எப்போதும் இது உயிர்ப்புடனே இருக்கும். கேட்பவர்களுக்கு தீர்மானத்தின் நகலை கட்டணமின்றி தர வேண்டும்.
கிராமசபை சாமானியனின் வலிமையான ஆயுதம். எனவே நாளை நடைபெறும் இக்கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டு உங்கள் ஊர் பிரச்னைகள், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்