×

18ம் தேதி குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அச்சுந்தன்வயல், ராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம் மணலூர், பரமக்குடி வட்டம் போகலூர், மட்டியரேந்தல், கடலாடி வட்டம் மீனாங்குடி, கமுதி வட்டம் நகரத்தார்குறிச்சி, கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் ஆகிய பகுதிகளில் ஆக.18ம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்  நடைபெறும். பொதுமக்கள் ரேஷன் கார்டு பிழைதிருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மனு அளிக்கலாம்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...