×

சாயல்குடியில் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை

சாயல்குடி, ஆக.14: சாயல்குடி பகுதியில் அனல் மின்நிலையத்திற்கு இடம் கையகபடுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாயல்குடி  பகுதியில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்க  3 இடம் தேர்வானது. ஆனால் கடற்கரை மிக அருகில் இருப்பதால், மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதி மறுத்தது. இதனால்  நரிப்பையூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் மாற்று இடத்தில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அரசு நிலங்களை கையகப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள்,  கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் மின்நிலையம் அமைப்பதற்கு மீண்டும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில்,  நரிப்பையூர் பகுதியில் முக்கிய தொழிலாக கடல்சார் தொழில் நடந்து வருகிறது. அனல்மின் நிலையம் அமைந்தால், கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனை ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல்துறை தெரிவித்துள்ளது. அதனை மீறி, தற்போது மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை