×

விபத்து ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளாத போலீசார்

பரமக்குடி, ஆக.14: பரமக்குடி, முதுகுளத்தூர் சாலையில் தொடர்ந்து சரக்கு வாகனங்களில் அளவிற்கு அதிகமாக  சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பரமக்குடி நகர் பகுதியிலிருந்து சரக்கு வானங்களில் தொடந்து அளவிற்கு அதிகமாக சரக்கு மூடைகள் ஏற்றப்பட்டு வருகிறது.    அதிகமான பொருட்களை ஏற்றிய பிறகு அதிவேகமாக சாலைகளில் வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது.  அதிக வேகத்தை கட்டுப்படுத்த ஹைவே போலீசார் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் விபத்துக்கள் இன்னும் குறையவில்லை. சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தலையிட்டு, அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஜெயபால் கூறுகையில், போலீசார் கண்டு கொள்ளாததால் பயமில்லாமல் சரக்கு வாகன ஓட்டுநர்கள் அளவிற்கு அதிமாக பொருட்களை ஏற்றிச்செல்கின்றனர்.  இதனால் போக்குவரத்து நெரிசலான இடங்களில் பிற வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விபத்துக்களை தடுக்க  போலீசார் சாலையில் சரக்கு வாகனங்களில அதிகமான பொருட்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை