×

முடியப்பர் ஆலய திருப்பலி விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.14: ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள வடக்கு ஊரணங்குடி கிராமத்தில் திருப்பலி மற்றும் அன்னதான விழா நடைபெற்றது.     ஆர்.எஸ் மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட வடக்கு ஊரனங்குடி கிராமத்தில் உள்ள புனித முடியப்பர் ஆலயத்தில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் பங்கு தந்தை கிளமென்ட் ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது திருப்பலி முடிந்த பின்னர் 80 வது ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம விழா கமிட்டியை சேர்ந்த அருளாந்து, சூசைரெத்தினம் சபரி ராஜ் மற்றும் கிராமம் பொதுமக்கள் செய்திருந்தனர். திருப்பலி மற்றும் அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை