×

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

மதுரை, ஆக. 14: மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வக்கீல் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுதந்திர தினவிழாவை வார்டுகள் தோறும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ெகாண்டாடுவது, வார்டுதோறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாஹசன், காமராஜ், துரையரசன், நிர்வாகிகள் சுந்தர்ராஜன், முருகன், பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்டம், பகுதி, வார்டு, இளைஞர்கள், மகிளா காங்கிரஸ், ஐஎன்டியூசி நிர்வாகிகள், சிறுபான்மை, வழக்கறிஞர்கள், பட்டதாரிகள், தாழ்த்தப்பட்டோர், ஓபிசி, மருத்துவர், மனித உரிமை, மாணவர்கள், வர்த்தகர்கள் ஆகிய பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...