×

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

பொன்னேரி, ஆக.14:  திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ உத்தரவின்படி மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி மற்றும் மனஅழுத்தம் குறித்து 2ம் கட்ட பயிற்சி முகாம் நாலூர் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. மீஞ்சூர் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி தலைமை வகித்தார். பயிற்சியின்போது, மன அழுத்தம் என்றால் என்ன, மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்,

அறிகுறிகள், விளைவுகள், மன அழுத்தம் தொடர்பான நோய்கள், மன அழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள், உணவு பழக்கங்கள் குறித்து மன அழுத்த பயிற்சியாளர் முத்து விளக்கினார். அங்கன்வாடி பணியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உடல், மனதை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...