×

அரசு நிலம் அதிரடியாக மீட்பு

திருத்தணி, ஆக.14:  திருத்தணியில் தனியார் பிடியில் இருந்து ரூ15 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில் ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து அந்த நிலத்தில் பயிரிட்டு வந்தார். இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின்படி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, திருத்தணி தாசில்தார் செங்கலா ஆகியோர் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சர்வேயர்கள்,

கிராம நிர்வாக அலுவலர்கள்  சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்துக்கு சென்றனர். அங்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து  நெல் பயிரிட்டிருந்த ஒரு ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு, ரூ15 லட்சம் என தெரியவந்தது.  அந்த நிலம் வருவாய் துறையினருக்கு சொந்தம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...