×

ஆடிப்பூரம் அம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு

பள்ளிப்பட்டு, ஆக. 14: பள்ளிப்பட்டு வட்டத்தில் ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனூர், இராஜாநகரம், பாலாபுரம், வெள்ளாத்தூர், ஸ்ரீகாளிகாபுரம், சொராக்காய்பேட்டை, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடிபுரத்தை முன்னிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர்.அதற்கு முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் பொங்கலை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் சில இடங்களில் அம்மனுக்கு கூழ் ஊற்றி, கும்பம் படைத்தும் வழிப்பட்டனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...