×

அனைத்து ஊராட்சிகளிலும் 15ல் சிறப்பு கிராம சபை: கலெக்டர் அறிக்கை

திருவள்ளூர், ஆக. 14: சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை (15ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும், சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும். இதில், மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக்குழு அங்கத்தினர், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சுதந்திரத்தினத்தன்று (15ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில், பிளாஸ்டிக் தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், குடிநீர் சிக்கனம், டெங்கு தடுப்பு நடவடிக்கை,

தூய்மை கணக்கெடுப்பு, கழிப்பறை இல்லாதோர் பட்டியல், அங்கன்வாடி கழிப்பறைகள், சுகாதார வளாகங்கள் பராமரிப்பு, பசுமை வீடு திட்டம், பள்ளி செல்லா குழந்தைகள், மழை நீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்குதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இதுகுறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் மேம்பாட்டு திட்ட சுய உதவிக்குழு அங்கத்தினர், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...