×

உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோயிலில் 1008 பால் குட ஊர்வலம்

உத்திரமேரூர், ஆக. 14: உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட  பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீதுர்க்கையம்மன் கோயிலில் 28ம் ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவம் நேற்று சிறப்பாக  நடந்தது மஹோற்சவத்தை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோயிலிருந்து 1008 பால்குடங்களுடன் நாதஸ்வர மேளதாள வாத்தியங்களுடன், தாரை தப்பட்டம், வாதியங்களுடன், வானவேடிக்கைகள் முழங்க பஜார் வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஸ்ரீதுர்க்கையம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். பிற்பகல் கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். மாலை கோமாதா பூஜை சிறப்பாக நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ துர்கையம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதே போல் உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி கள்ளகுறத்தியம்மன் ஆலயத்தில் 25ம் ஆண்டு ஆடிப்புர பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கோயிலில் கோ பூஜை, வினாயகர் பூஜை, பால் அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது மாலை கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...