×

கள்ள மதுவிற்ற பெண் கைது

செங்கல்பட்டு, ஆக.14: செங்கல்பட்டு அடுத்த வடகால் கிராமத்தில் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை நடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று முன்தினம் மதியம் தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் வடகால் கிராமத்திற்கு சென்று நோட்டமிட்டனர்.அப்போது, ஒரு வீட்டில் நபர்கள் அடிக்கடி வந்து சென்றதையடுத்து, போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அதில், டாஸ்மாக் மதுக்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

சோதனையில் 100 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராணி (45) எனபவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...