×

மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஆக.14: சுதந்திர தினமான நாளை (15ம் ேததி) மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து  கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: நாளை நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை தடைசெய்தல், அந்தியோதயா இயக்கத்தின் மூலம் வறுமையே இல்லாத மாநிலமாக மாற்ற அரசோடு ஒத்துழைத்தல், கிராம ஊராட்சியின் பொது செலவினக் கணக்கு குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சுகாதார உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல் போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்.

மேலும், நூறு நாள் வேலைத்திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைகுறித்தும், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும்பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், நியாயவிலைக்கடை அங்காடிகளின் ஆவணங்களை சமூகத் தணிக்கைக்கு உட்படுத்தி ஒப்புதல் பெறுதல்,சத்துணவுத் திட்டம் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ளுதல், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி அளித்தல் உள்ளிட்ட இதர கிராம முன்னேற்றம் குறித்து ஊராட்சி மன்ற தனி அலுவலரால் கொண்டுவரப்படும் பொருள்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கலெக்டர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags :
× RELATED கணிதத்துறை கருத்தரங்கம்