×

புடவை எம்ராய்டிங்கில் தைத்து கடத்தி வந்த ரூ20 லட்சம் தங்கம் பறிமுதல்: மலேசியா பெண் கைது

மீனம்பாக்கம், ஆக. 14: புடவை எம்ராய்டிங்கில் தைத்து மலேசியாவில் இருந்து விமானம் மூலம் ரூ20 லட்சம் தங்க நகைகளை கடத்தி வந்த மலேசிய பெண்ணை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில், சுற்றுலா பயணியாக வந்த மலேசியாவை சேர்ந்த விமலேஸ்வரி (47) என்ற பெண்ணின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் இருந்த கைப்பையை சோதனை செய்தபோது, புத்தம்புதிய 2 தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு சந்தேகம் தீராத அதிகாரிகள், பெண் சுங்க அதிகாரிகளை வரவழைத்து, விமலேஸ்வரியை தனி அறையில் வைத்து முழுமையாக சோதனையிட்டனர். அப்போது, அவர் அணிந்திருந்த புடவையில் செய்யப்பட்ட எம்ப்ராய்டிங்கில் 10 தங்க செயின்களை வளையம் போன்று வைத்து தைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்து, கைப்பற்றினர். மொத்தம் 660 கிராமம் கொண்ட 12 செயின்களின் சர்வதேச மதிப்பு ரூ20 லட்சம்.
இதையடுத்து செயின்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமலேஸ்வரியை கைது செய்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...