×

விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

போச்சம்பள்ளி, ஆக.14: விலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுவதை தடுக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்  மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், குளம், குட்டைகளும் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இதனால்  மாவட்டத்தில் உள்ள காப்பு காடுகளில் வாழும் மான், மயில், யானை, கரடி,  காட்டுப்பன்றி, முயல், உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள்  அடிக்கடி நுழைகிறது. கண் மூடித்தனமாக வரும் விலங்குகள் கிணற்றில் விழுந்தும், வாகனங்கள் மீது மோதியும் விபத்தில் சிக்கி  கொள்கிறது.

இதை தடுக்க வனத்துறையினர் காப்பு காடுகளில் உள்ள தொட்டிகளில்  டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்தனர். அதைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்  உத்தரவின் பேரில் வனத்துறையினர் கல்லாவி காப்பு காட்டில் விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை  தொட்டிகளில் டிராக்டர் மூலம் நீர் நிரப்பி வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது