×

ஸ்ரீபாரதி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா

கிருஷ்ணகிரி, ஆக. 14: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை தவளத்தில் இயங்கி வரும் ஸ்ரீபாரதி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க நாள் விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி நிறுவனர் சண்முகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சங்கரன்(முன்னாள் சுகாதார ஆய்வாளர்) வரவேற்றார். பாரதி கல்வி நிறுவனத்தின் தனி அலுவலர் ராஜன் முன்னிலை வகித்தார். தேசிய குடல்புழு நீக்கும் நாளை முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குடற்புழு நீக்கும் வண்ணம் அவர்களுக்கு நிறுவனர் சண்முகம் மாத்திரைகளை வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தாய்சேய்நல அலுவலரும், ஸ்ரீபாரதி ஏஎன்எம் நர்சிங் கல்லூரியின் பொறுப்பு முதல்வருமான நிர்மலா கலந்து கொண்டு குடற்புழுநீக்கம் பற்றியும், உடல்ஆரோக்கியத்தினை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். விழாவில் ஆங்கில பேராசிரியை வீணா, கணினி விரிவுரையாளர் விஜயலெட்சுமி, கணிதபேராசிரியை கனிமொழி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் விலங்கியல் பேராசிரியர் வரதராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மேலாளர் பூபாலன் செய்திருந்தார்.

Tags :
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது