×

டிரினிட்டி பள்ளியில் விளையாட்டு விழா

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் ஆனந்த் நகரில் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இப்போட்டியை தாளாளர் மைக்கேல்காட்வீன் தலைமையேற்று நடத்தி வைத்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் பிலிப் வரவேற்றார். போட்டியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் வயதிற்கேற்றவாறு குழுக்களாக பிரிந்து வண்ண உடையுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவகுப்பினை செய்து  காண்பித்தனர். ஒலிம்பிக் ஜோதியை மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை  சுற்றி கொண்டு வந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குனர் கர்னெல்ரெட்டி மற்றும் சிபிஎஸ்இ முதல்வர் பாரதிரெட்டியிடம் வழங்கினர். அருள்தந்தை ஜாக்கிம், மற்றும் பள்ளியின் ஆலோசகர் எட்வர்ட் சுகுணராஜ் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். முடிவில் தமிழ் பேராசிரியர் திராவிடன்மணி நன்றி கூறினார். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கவிதாகமிலினி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது