×

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

தேன்கனிக்கோட்டை,  ஆக. 14: தேன்கனிக்கோட்டை தாலுகா உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்  கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேன்கனிக்கோட்டை தாலுகா அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள்  தேர்வு நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவகுமார் தலைவராகவும், தளி மகளிர்  உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது