×

தெற்காசியாவில் உயர்கல்வி வழங்குவதில் சாதனை பாவை கல்வி நிறுவனத்துக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை சான்று

ராசிபுரம், ஆக.14:  2016-2017ம் கல்வியாண்டில்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கான, தெற்கு ஆசியாவின் முதல் 25  பயிற்சி மையங்களில் பாவை கல்வி நிறுவனங்களும் ஒன்றாக தேர்வு பெற்று சாதனை  படைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி,  ஆங்கில மொழியில் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் சிறந்த வல்லுநர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிபிகேட், இங்கிலீஷ் கார்னர், அயல்நாட்டு பயிற்சி மையம் போன்றவைகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது. இதில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிசினஸ் இங்கிலீஷ் சர்டிபிகேட் படிப்பை, கடந்த பத்து ஆண்டுகளாக பாவை கல்வி நிறுவனம் நடத்தி, பன்னாட்டு அளவில் பயன்படும் சான்றிதழை வழங்கி வருகிறது. கடந்த 2016-2017ம் கல்வியாண்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின், உயர் கல்விக்கான தெற்கு ஆசியாவின் முதல் 25 பயிற்சி மையங்களில், ராசிபுரம் பாவை கல்வி நிறுவனமும் ஒன்றாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளது.

 இதுபோன்ற பல்வேறு தொடர்ச்சியான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பிற்காக, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ப்ரஸ் என்ற அமைப்பு, பாவை பொறியியல் கல்லூரியை பாராட்டி அங்கீகாரத்திற்கான சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. சாதனை படைத்த ஆங்கிலத்துறை முதன்மையர் சென்னியப்பன், பாவை பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்