×

24 மணி நேரமும் மது விற்பனை தடுக்காவிட்டால் போராட்டம் கலெக்டரிடம் திமுகவினர் புகார்

குமாரபாளையம்,ஆக.14:  குமாரபாளையத்தில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை செய்வதை  தடுக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என நாமக்கல் கலெக்டரிடம் திமுகவினர்  புகார் தெரிவித்துள்ளனர்.குமாரபாளையம் காவிரி கரை பகுதியில் வெள்ள பாதிப்பை  பார்வையிட வந்த நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியத்திடம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சேகர் மற்றும் திமுக  நிர்வாகிகள் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: குமாரபாளையம் சுற்றுவட்டார  பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு படி மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறந்து இரவு  பகலாக மது விற்பனை செய்கின்றனர். இந்த கடைகளுக்கு பல்வேறு பகுதியில் போலியாக தயாரிக்கப்பட்ட மது பாட்டில்கள்  சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்கள்  அதிகரித்துள்ளது. விசைத்தறி மற்றும் சாயப்பட்டறை தொழிலாளர்கள்  நிறைந்த இங்கு தடையில்லாமல் மது விற்பனை செய்யப்படுவதால், தொழிலாளர்  குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
பல முறை போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து 10 நாட்களில்  இந்த மது விற்பனையை முற்றிலுமாக தடுக்காவிடில், எம்எல்ஏ மூர்த்தி  தலைமையில், மக்களை திரட்டி குமாரபாளையத்தில் உள்ள மது கடைகள் முன்பு  போராட்டம் நடத்தப்படும்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்