×

செக்காரப்பட்டி மாரியம்மன் கோயிலில்

இன்று மண்டல பூஜைதர்மபுரி, ஆக.14: தர்மபுரி அருகே செக்காரப்பட்டி மாரியம்மன் கோயிலில் இன்று(14ம் தேதி) மண்டல பூஜை நடைபெற உள்ளது.
தர்மபுரி மாவட்டம் செக்காரப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில், மண்டல பூஜை இன்று(14ம் தேதி) நடைபெற உள்ளது. ஜங்காலப்பட்டி காளிம்மன் கோயில் வளாகத்தில் இருந்து சக்தி அழைப்பு நடக்கிறது. விழாவையொட்டி, கூழ் வார்த்தல் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜை நடத்துகின்றனர். பக்தர்கள் பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து கோயிலை சென்றடைவர். பின்னர், பெண்கள் மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா