×

நல்லம்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

தர்மபுரி, ஆக.14: நல்லம்பள்ளியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று(14ம் தேதி) நடக்கிறது. இது குறித்த தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான இலவச மருத்துவ முகாம் மாவட்டம் முழுவதும் ஒன்றியம் வாரியாக நடக்கிறது. இன்று (14ம் தேதி) நல்லம்பள்ளி அவ்வை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 16ம் தேதி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 17ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21ம் தேதி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய தொடக்க உருது பள்ளியிலும்,

23ம் தேதி மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 24ம் தேதி அரூர் பாட்சா பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 25ம் தேதி நகராட்சி டவுன் தொடக்கப்பள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளி இலவச தேசிய அடையாள அட்டைகள், பள்ளி செல்ல பயணப்படி, இலவச அறுவை சிகிச்சை, 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காலிபர், சிபி சேர், ஊன்றுகோல், செவித்துணை கருவி, கல்வி உதவிதொகை படிவம், நலவாரிய பதிவு ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா