×

10 ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ள தேர்திருவிழா, ெதருக்கூத்து நடத்த அனுமதிக்க வேண்டும்

சேலம், ஆக.14: செந்தாரப்பட்டியை சேர்ந்த பொது மக்கள் மற்றும் தெருக்கூத்து  கலைஞர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ரோகிணியிடம்மனு அளித்தனர். இதில்  தெருக்கூத்து கலைஞர்கள் கூறியதாவது: செந்தாரப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் சக்கரத்து ஆழ்வார் பெருமாள், மகா மாரியம்மன், அங்காளம்மன், தர்மராஜா உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தி தேரோட்டம் மற்றும் சுவாமி புறப்பாடு நடத்துவது வழக்கம். அப்போது, கிராமிய கலைநிகழ்ச்சியான தெருக்கூத்து நடத்தப்படும். சுவாமி புறப்பாடு, தங்கள் பகுதிக்கும் வர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வழக்கு தொடர்ந்தனர். கால நேரம் மற்றும் செலவீனத்தை கருத்தில் கொண்டு இதற்கு கோயில் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி திருவிழா நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன்பின்னரும் கடந்த 10 ஆண்டுகளாக தேர் திருவிழா மற்றும் சுவாமி புறப்பாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை வரும் என காரணம் கூறி தட்டிக்கழித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன், கிராமிய கலைகளும் அழியும் நிலைக்கு சென்றுள்ளது. எனவே, தேரோட்டம் மற்றும் சுவாமி புறப்பாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்