×

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆடிப்பூரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம், திருவிளக்கு பூஜை

இடைப்பாடி, ஆக.14: இடைப்பாடி வெள்ளாண்டிவலசை அம்மன் நகர் முத்துமாரியம்மன் கோயிலில், 18ம் ஆண்டு ஆடிப்பூரம் விழாவையொட்டி அம்மனுக்கு புதிதாக பஞ்ச லோக கவசம் சாற்றுதல், 1008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், கோ பூஜை, மாங்கல்ய பூஜை மற்றும் பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது. இடைப்பாடி கவுண்டம்பட்டி புதிய சின்னமாரியம்மன், வடக்கு தெரு மாரியம்மன் கோயில்களில், ஆடிப்பூர விழாவையொட்டி பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டியும், சாதி மத வேறுபாடின்றி 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். வெள்ளாண்டிவலசை காளியம்மன் கோயில், தாவாந்தெரு காளியம்மன் ேகாயில்களில் ஆடிப்புரம் விழா நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் இடைப்பாடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்