×

நாகர்கோவில் கீழத்தெரு மணியடிச்சான் கோயில் கொடை விழா 3 நாட்கள் நடக்கிறது

நாகர்கோவில், ஆக. 14:  நாகர்கோவில் கீழத்தெரு முத்தான வாழ்வுதரும் முத்தாரம்பிகா, சமேத முத்தீஸ்வரர் சுடலைமாடசுவாமி கோயில் (மணியடிச்சான் கோயில்) கொடை விழா நேற்று தொடங்கியது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை ஆகியவை  நடந்தது. மாலை 4.30 மணிக்கு பஜனை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6.15 மணிக்கு கணபதி, முத்தாரம்பிகா சமேத முத்தீஸ்வரர்,  சந்தன மாரியம்மன்,  சந்தான கோபாலகிருஷ்ணன்,  ஆதிலிங்கம்,  லிங்கேஸ்வரி, நந்தீஸ்வரர் ஆகியோருக்கு மாக்காப்பு சாத்துதல் நடந்தது. இரவு 7.30 மணிக்கு  சுடலைமாடசாமி, இசக்கியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு களபம் சாத்துதல், 8 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு கணியான் கூத்து ஆகியவை நடந்தது. இன்று (14ம் தேதி) காலை 7.30 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டுத்துறையிலிருந்து மேளதாளங்களுடன் புனிதநீர் எடுத்து அனைத்து பக்தர்களும் கோயில் வருதல், 9 மணிக்கு வில்லிசை, 11.30 மணிக்கு நாதஸ்வர மேளத்துடன் பால்குடம் எடுத்து ஊர்வலம் வருதல், பகல் 12 மணிக்கு அபிஷேகம், சுடலைமாடசுவாமிக்கு களபம் சாத்துதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடு, 6 மணிக்கு கரகாட்டம், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னப்படைப்பு, தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 15ம் தேதி காலை 9 மணிக்கு வில்லுப்பாட்டு, கரகாட்டம், நாதஸ்வரம், தப்பாட்டம் ஆகியவை நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாடனுக்கு பூப்படைப்பு, அம்பாள் திருவீதி வரும்போது வாசலில் நிறை
குடம், மஞ்சள் நீர் வைத்து வழிபடுதல் ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிமாமுனிவர் யாதவ சமுதாய மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்