×

கடல் கொந்தளிப்பால் படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரி, ஆக. 14: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் மழை மற்றும் காற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கடற்கரையில் இருந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் மற்றும் கருமேகம் காரணமாக நேற்று காலை சூரிய உதயம் தெரியவில்லை.

இந்நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை தொடங்கியது. கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்படவில்லை.  சுற்றுலா பயணிகளை நம்பி இங்கு ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். கடைகள் அமைத்தும், தள்ளுவண்டி மூலமும், கையில் பொருட்களை வைத்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி