×

குழித்துறை, நித்திரவிளை பகுதியில் கார், ஆட்ேடாவில் கேரளாவுக்கு கடத்திய 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம், ஆக. 14: வருவாய்த்துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதனை  படந்தாலூமூடு சோதனைச்வாடியில்  மடக்கி பிடித்தனர்.  காரை  சோதனை செய்த போது   சாக்கு மூட்டைகளில் சுமார் 700 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து காருடன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்ேடாவில் இருந்த இன்னொருவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

நித்திரவிளை: இது போல் நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியில் நேற்று மாலை கேரள பதிவெண் கொண்ட லோடு ஆட்டோ  மீன் பெட்டிகளை அடுக்கிய படி வந்தது. இதனை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான அதிகாரிகள் தடுத்து சோதனை செய்தனர். இதில் மீன் பெட்டியின் அடியில் சாக்கு மூட்டையில் 880 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை தூத்தூரில் இருந்து கேரளபகுதியான இஞ்சிவிளைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. ஆட்டோவை டிரைவர்காக்கவிளை பகுதியை சேர்ந்த சுனிலை (39) கைது செய்து, ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி