×

நாகர்கோவில் ஜங்ஷனிலும் செயல்படும் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அளிக்க ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாகர்கோவில், ஆக.14: கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏதுவாக ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வேயின் செய்தி குறிப்பு:
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் கேரளாவில் மழை வெள்ள மீட்பு பணிகளிலும்  இணைந்துள்ளது. வெள்ள சேத பகுதிகளுக்கு நிவாரண பொருட்களையும், சுகாதார மேம்பாட்டிற்கான மருந்து பொருட்களையும் பயணிகள், ரயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அளிக்கின்ற பொருட்களை எடுத்து செல்ல ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டர்கள்கள் நாகர்கோவில் ஜங்ஷன், திருவனந்தபுரம் சென்ட்ரல் உள்ளிட்ட கேரளாவில் முக்கிய 9 ரயில் நிலையங்களிலும் பார்சல் அலுவலகங்களில் செயல்படும். துணை வணிக பிரிவு மேலாளர் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்துள்ளார். ரயில் பயணிகள் நலச்சங்கம் இணைந்து கூடுதல் பணிகளை மேற்கொள்ளலாம். திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெட்ஷீட், போர்வைகள், சாரி, டவல், சட்டை, பனியன்கள், உள்ளாடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், துண்டுகள் வழங்கலாம். பயன்படுத்திய பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மருந்து பொருட்களாக ஓஆர்எஸ் பாக்கெட்கள், குளோரின் மாத்திரைகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், லோஷன், கொசுவர்த்திகள், கொசுவலை, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு தூள், சானிட்டரி நாப்கின், பற்பசை, பிரஷ், சோப்பு வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், மாணவர்களுக்கான பள்ளி உபகரணங்கள், புத்தக பைகள், நோட்டு புத்தகங்கள், பென், பென்சில், போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்கலாம். பணமாக வழங்க கூடாது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...