×

திண்டிவனம்- ஒலக்கூர் நெடுஞ்சாலையில் தொடரும் வாகன விபத்து

மயிலம், ஆக. 14:  திண்டி
வனத்திலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஒலக்கூர் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியானது தமிழ்நாட்டில் மிகுந்த ஆபத்தான பகுதியாகும். இந்த 12 கிலோமீட்டர் தொலைவு நெடுஞ்சாலையில் விபத்து நடக்காத நாளே கிடையாது. தமிழகத்தின் கிழக்கு, தெற்கு மாவட்டங்கள் மற்றும்  திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் சென்னை செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் திண்டிவனம் வழியாகத்தான் தேசிய நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும். திண்டிவனம் வரை தனியாக வரும் வாகனங்கள் திண்டிவனம் வந்தவுடன் 20 மாவட்ட வாகனங்களை பார்த்ததும் தங்ளையறியாமல் ஒரு உற்சாகம் ஏற்பட்டு மற்ற வாகனங்களுடன் வேகமாக போட்டியிட தொடங்கும்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் செல்லும் இவர்களை  கட்டுப்படுத்த போலீசார் யாரும் இல்லை. சில நேரங்களில் ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து ஆங்கில படங்களில் வரும் கார் ரேஸ் போல செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த 12 கிலோமீட்டரும் கிராம பகுதியில் அமைந்து உள்ளதால் போக்குவரத்து போலீசார் இங்கு இல்லை. எல்லா வாகனங்களும் திண்டிவனத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓங்கூர் சுங்கசாவடியில்தான் பிரேக் அடிக்க வேண்டிய இடம். அதனால் எல்லா வாகனங்களும் மின்னல் வேகத்தில்தான் செல்லும். தினமும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். எனவே விபத்துகளை தடுக்க இந்த 20 கிலோ மீட்டர் தூரத்தை போக்குவரத்து போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அனைத்து வாகனங்களுக்கும் ஒரு தற்காலிக வேகத்தடை அமைத்து வேகமாக செல்லும் மனபாங்கை மாற்றி, வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த எஸ்பி இந்த பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை