×

புதுவையில் மீண்டும் ஹெல்மெட் கட்டாயமாகிறது

புதுச்சேரி, ஆக. 14: புதுச்சேரியில் சாலை விபத்துகளை தடுக்க ஹெல்ெமட் கட்டாய சட்டத்ைத கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என டிஜிபி சுந்தரி நந்தாவுக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். ேபாலீசார் மற்றும் அரசு பணியாளர்கள் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளதாவது:புதுச்சேரியில் இந்தாண்டு மட்டும் 969 சாலை விபத்துகள் நடந்துள்ளது.  இதில் அபாயகரமான 91 விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்ட ஹெல்மெட் கட்டாய சட்டத்தை டிஜிபி கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஹெட்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்.காவலர்கள், அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அரசு பணியாளர்கள் இவ்விஷயத்தை முக்கியமானதாக கருதவேண்டும். ஹெல்மெட் அணிவதை தவிர்க்கவோ, விடுவிக்கவோ எண்ணாமல் இதை கடைபிடிக்கவும், நடைமுறைப்படுத்துவதும் அவசியம். அத்துடன் ஹெல்மெட்டில் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் உள்ளதை அணிவது சிறந்தது. கருப்பு ஹெல்மெட் அணிவது சிறந்ததாக இருக்காது. கருப்பு ஹெல்மெட் இரவில் பார்வைக்கு உகந்ததாக இருக்காது. அத்துடன் ஹெல்மெட்டில் இரவில் ஒளி உமிழும் ஸ்டிக்கரை ஒட்டுவது அவசியம்.

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனம் ஓட்டுவோர், பின்னே அணிந்திருப்பவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் முதல்முறை பிடிப்பட்டால் ரூ. 100 அபராதமும், 2வது முறை பிடிப்பட்டால் ரூ. 300 அபராதமும் விதிக்கலாம். சட்டப்படியும், சொந்த பாதுகாப்புக்காகவும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் பயணித்து முதல்முறையாக பிடிபட்டால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கும் பரிசீலனையில் மத்திய அரசு உள்ளது. 3 முறைக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டால் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்யும் திட்டமும் உள்ளது. இதனால் இச்சட்டத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...