×

பிளாஸ்டிக் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

திருபுவனை, ஆக. 14: திருபுவனை அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் தடையை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.புதுச்சேரி முழுவதும் பல்ேவறு பகுதிகளில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் தடையை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தும், விற்பனை செய்தும் வருகின்றனர். துறை அமைச்சர், அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் தடையை மீறி 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கும் அதிரடியாக சீல் வைத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மைக்ரான் அளவு சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறும்போது, 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதை மீறுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விவாதிக்க நாளை (இன்று) சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.ஆய்வின் போது, கொம்யூன் ஆணையர் சீத்தாராமன், போலீஸ் எஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.தொடர்ந்து மதகடிப்பட்டில் உள்ள அரசு மாணவர் விடுதியை அமைச்சர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...