×

வீராணம் நீர் திறப்பு 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கி விவசாயிகள் பாதிப்பு

கடலூர், ஆக. 14: கடலூரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் முஷ்ணம் வட்டத்தூர் கிராம விவசாயிகள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாபதி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வீராணம் ஏரியிலிருந்து விஎன்எஸ் மதகு வழியாக திறந்து தண்ணீர் வடக்கே செல்லும் போதெல்லாம் கோதாவரி புது வாய்க்கால் வழியாக தென்புறம் சென்று வட்டத்தூர் குடிகாடு, சோழதரம், புடையூர், கோதண்டவிளாகம் ஆகிய கிராமங்களில் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு பயிர்கள் சுமார் 300 ஏக்கர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிறது. இது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

இது குறித்து முறையிட்டும் இதுவரை எந்த விதமான நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் தான் பயிர்கள் பாதிப்பு உள்ளாகும். ஆனால் இந்தாண்டு அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை சாகுபடி சுமார் 150 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.மேலும் விஎன்எஸ் கடகோடி மதகில் இருந்து புடையூர் எல்லை வரையில் உள்ள கோதாவரி வடிகால் மற்றும் கிளை வாய்க்காலை அளவீடு செய்து தூர்வாரியும், கரையை உயர்த்தியும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி