×

திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம் ஸ்மார்ட் செல்போன் மூலம் விண்ணப்பித்து சாதி, வருமான சான்று பெறும் வசதி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

திருவண்ணாமலை, ஆக.14: சாதி, வருமான சான்றுகள் உள்பட வருவாய்த்துறையின் சான்றுகளை பெற, செல்போன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால், உள்ளங்கையில் உலகம் சுருங்கி விட்டது. இணைய வசதி கொண்ட செல்போன்கள் மூலம், அனைத்து சேவைகளையும் இருந்த இடத்தில் இருந்தே பெறவும், தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதன்படி, அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அதிகாரிகளை சந்திக்க காத்திருந்து பெற வேண்டிய வருவாய்த்துறையின் சான்றுகளை, இருந்த இடத்தில் இருந்தே, செல்போன் இணைய வசதியின் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கான வசதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது,

திருவண்ணாமலை மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தில் 475 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்களின் மூலமாக வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் 20 வகையான சான்றிதழ்கள், பட்டா மாற்றம் மற்றும் சமூக நலத்துறையால் வழங்கப்படும் திருமண உதவித் தொகை, பெண் குழந்தை பாதுகாப்பு நிதி உதவி திட்டங்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.தற்போது, இ-செவை மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பெறுவதற்காக இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக அமையும்.அதன்படி, பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் எளிதில் விண்ணப்பிக்கலாம். எனவே, வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற விரும்புவோர், https://www.tnesevai.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரியில் தங்களை பதிவு செய்து, தங்களுக்கான பயனாளர் பெயர் பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.

இதற்கான, வரன்முறைகளை.https://www.tnesevai.tn.gov.in/videotutorial.html..மற்றும் https://www.tnesevai.tn.gov.in/UserManual.html ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.மேலும், UMANG என்ற ஆன்ட்ராய்டு செல்போன் செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமானச்சான்று, சாதிச்சான்று, பிறப்புச் சான்று மற்றம் இருப்பிடச் சான்று ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் செல்போன் மூலமாக விண்ணப்பித்து பெறலாம்.இதற்கான சேவை கட்டணமாம் ₹60 மட்டும் இணையதள வங்கிமுறை எனப்படும் இன்டர்நெட் பேங்கிங் அல்லது கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்தலாம்.எனவே, பொதுமக்கள் இனிவரும் காலங்களில் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை, வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...