×

திருவிக பூங்காவை சீரமைக்காவிட்டால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு எச்சரிக்கை

சென்னை, ஆக. 13: மெட்ரோ ரயில் நிர்வாகம் வாக்குறுதி அளித்தபடி திரு.வி.க.பூங்கா பணியை விரைவில் தொடங்கா விட்டால் மெட்ரோ ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும், என்று மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பு எச்சரித்துள்ளது. மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்காவில் பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த பூங்காவில் மெட்ேரா ரயில் நிலையம் அமைக்கப்பட்டு, ஒராண்டாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் நிலம் கையகப்படுத்திய போது, பூங்காவில் உள்ள மரங்கள் எதையும் வெட்டாமல் இடம் மாற்றி வைத்து நன்கு பராமரிக்கப்படும், இயற்கை வளம் எதுவும் அழிக்கப்படாமல் ரயில் நிலையம் அமைக்கப்படும். ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, மீண்டும் திரு.வி.க. பூங்கா பழையபடியே பகுதி மக்களின் நடைப்பயிற்சிக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று உறுதியளித்தது. ஆனால் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் பூங்கா பயன்பாட்டிற்கு வரும் வகையில் அங்கு எந்தவித பணியும் துவங்கப்படவில்லை.

இதனால், அப்பகுதி மக்களிடையே வருத்தமும், ஏக்கமும் மேலோங்கி உள்ளது. இந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பலர் 50 வயதை தாண்டியவர்கள். பூங்கா விரைவில் திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் முதலில் வழங்கிய வாக்குறுதியின்படி, ரயில் நிலையத்தின் கட்டிடங்கள் மற்றும் அது தொடர்பான கட்டுமான பணிகளை தவிர்த்து, இதர இடங்களை சீரமைத்து நடைபாதை அமைத்து, பழையபடி அனைத்து மக்களும் நடைபயிற்சி மேற்ெகாள்ளும் வகையில் பணிகளை துவக்கி, வரும் தீபாவளி தினம் முதல் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். திரு.வி.க.பூங்காவை அமைக்கும் பொருட்டு அதற்கான பணிகளை விரைவில் துவங்க வேண்டும். பூங்கா பணிகளை துவங்கவில்லை எனில் காந்தி ஜெயந்தி அன்னு அறவழியில் திரு.வி.க. மெட்ரோ ரயில் நிலையம் முற்றுகையிடப்படும். இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...