×

மாவட்டம் முழுவதும் திமுகவினர் மவுன ஊர்வலம்

இளம்பிள்ளை, ஆக.13:கருணாநிதி மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இளம்பிள்ளையில் திமுகவினர் மவுன ஊர்வலம் நடத்தினர். இளம்பிள்ளையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் மவுன ஊர்வலம் நேற்று நடந்தது. பெருமாம்பட்டி பகுதியில் இருந்து இளம்பிள்ளை பேரூர் வரை ஊர்வலம் நடந்தது.

இதில் வீரபாண்டி ஒன்றிய பொறுப்பாளர் வெண்ணிலா சேகர், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் நிர்மலா செல்வம், தமிழரசி, செல்வராஜ் (இளம்பிள்ளை), முருகபிரகாஷ் (ஆட்டையாம்பட்டி), சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் நடராஜன், அன்பழகன், முருகேசன், சேகர், மனோகர், சதீஜ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதே போல் மகுடஞ்சாவடியில் ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ காவேரி நிர்வாகிகள் செழியன், வீரப்பன், அரிமா கண்ணன், அய்யனார், மாணிக்கம், விஸ்வநாதன், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் அமைதி பேரணி நடத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன் முன்னிலை வகித்தார். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவபடத்திற்கு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மவுன அஞ்சலி பேரணி அப்பம்மசமுத்திரம் கிராமம் முழுவதும் சுற்றி வந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி:கெங்கவல்லி ஒன்றியம் கூடமலை ஊராட்சியில், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கூடமலை பஸ் ஸ்டாப்பில் திமுக தலைவர் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கூடமலை ஊராட்சியைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்தனர். இதில் ராஜேந்திரன், ராமசாமி, கருப்பையா, மூக்கன், பெரியசாமி, நல்லமுத்து உள்ளிட்ட 15 தொண்டர்கள் மொட்டை அடித்து கொண்டனர். நிகழ்ச்சியில் சீனிவாசன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிட்டிபாபு, உறுப்பினர் மணிமாறன், பொன்னையன், ஜோதிவேல், காசி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை ஏற்காடு ஒன்றிய செயலாளர் பாலு தலைமையில் காந்தி பூங்கா அருகில்  துவங்கிய ஊர்வலம் கடை வீதி, ஏற்காடு பஸ் நிலையம், மேல் அழகாபுரம்,  ஜெரீனாக்காடு உள்ளிட்ட பகுதி வழியாக ஒன்டிக்கடை பகுதியில் உள்ள அண்ணா சிலை  அருகில் நிறைவடைந்தது. இதில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மவுனமாக சென்றனர்.

Tags :
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு