×

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

விழுப்புரம், ஆக. 13: உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னணத்தூர் கிராமத்தில் இருந்து, அரசு டாஸ்மாக் கடையில் இருந்து விற்பனையான பணம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை  எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக மேற்பார்வையாளர் அய்யனார் வந்தார்.
பாண்டூர் சாலையில் பைக்கில் அய்யனார் வந்து கொண்டு இருந்தபோது பைக் பெட்டி திறந்து, அதில் இருந்து ரூ.55 ஆயிரம் பணம் காற்றில் பறந்தது. இதனை அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் ராஜா என்பவர் பார்த்து, அனைத்து ரூபாய் நோட்டுகளையும் எடுத்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் போலீசார் டாஸ்மாக் மேற்பார்வையாளர் அய்யனாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்து, பணம் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், காற்றில் பறந்து சென்ற இரண்டாயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ராஜாவை உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், வட்டாட்சியர் காதர்அலி, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இந்நிலையில், ஆட்டோ டிரைவரின் நல்லெண்ணத்தை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் நேற்று பரிசு வழங்கினார். டிஎஸ்பி ராஜேந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை