×

வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் மழைவெள்ளத்தில் சேதமான தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

பண்ருட்டி, ஆக. 13:  பண்ருட்டி அருகே வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சிறுபாலம் ஒன்று வெள்ளத்தில் சேதமானது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் ஒத்தையடி பாதை வழியாக சென்று வருகின்றனர். பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பிடிஓ கண்டுகொள்வதில்லை. தற்போது மழைக்காலம் வர இருப்பதால் உடைந்த தரைப்பாலத்தை சரிசெய்து கொடுத்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள முந்திரி விவசாயிகள், பள்ளி மாணவர்கள் பலன் அடைவர்.

இல்லையெனில் பாலத்தை தாண்டி வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். மழைக்காலத்தின்போது 2015ல் ஏற்பட்டவாறு தற்போதும் மழை வெள்ளம் ஏற்படும் என அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து சிறப்பு கவனம் எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்