×

பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு அரியலூர் வீரமாகாளியம்மன் சுவாமி வீதி உலா

அரியலூர்,ஆக,13: அரியலூர்-பெரம்பலூர் சாலையில் காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. காலையில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து மேலும் அம்மனுக்கு தயிர், சந்தனம் போன்ற 13 வகையான அபிஷேகம் செய்து மாலை சுவாமி அரியலூர் முக்கிய வீதிகள்  காளியம்மன் கோவில்தெரு, ரயில்வே கேட், பென்னிஹவுஸ் தெரு, பெரியகடை வீதி, சத்திரம் ஆகிய வழியாக வந்து கோவிலை வந்தடைந்தன. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது