×

பொறுப்பேற்பு

கும்பகோணம், ஆக.13:  கும்பகோணம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கான தலைவர், துணைத்தலைவர், இயக்குநர்களுக்கான தேர்தல்,கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள வங்கி கட்டிடத்தில் நடந்தது. இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைவராகவும், பட்டம் விஸ்வநாதன் துணைத்தலைவராகவும், 9 பேர் இயக்குநர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை தேர்தல் அதிகாரி அனுஷியா, வங்கியின் நிர்வாக இயக்குநர் தாவூத்கான் ஆகியோர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர் மற்றும் 9 இயக்குநர்கள் பதவியேற்று கொண்டனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...