×

ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

திருவையாறு, ஆக. 13:  திருவையாறு அடுத்த  மேலத்திருப்பந்துருத்தி வண்ணான் சந்து தெருவை சேர்ந்த  பதுர்தீன் மகன்  முகமது ரிஷ்வான் (14). நடுக்காவேரியில் உள்ள தனியார்  பள்ளியில் 9ம் வகுப்பு  படித்து வந்தார். நேற்று தனது நண்பர்களுடன்  மேலத்திருப்பந்துருத்தி  குடிமுருட்டி ஆற்று பொனம்போக்கி சந்து  படித்துறையில் குளித்தார். அப்போது  அப்போது தண்ணீரில் ரிஷ்வான்  மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த  நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,  திருவையாறு தீயணைப்பு நிலைய (பொ)  அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு  வீரர்கள் விரைந்து சென்று குடமுருட்டி  ஆற்றில் பொதுமக்களுடன் தேடினர்.  அப்போது சுடுகாடு படித்துறை அருகே ரிஷ்வன்  உடல் மீட்கப்பட்டது. பெண்ணிடம் நகை பறிப்பு:  தஞ்சை அடுத்த  கரந்தையை சேர்ந்தவர் ஜான்சிராணி (57). இவர் நேற்று மாலை ராஜாராம் மடத்துத்தெரு அக்ரஹாரம் தெருவில் நடந்து சென்றார். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர், ஜான்சிராணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன்  செயினை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து ஜான்சிராணி அளித்த புகாரின்பேரில் தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஜமால் உசேன் 2வது தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவர் கடந்த 5 ஆண்டுககளாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மலர்விழி என்ற மனைவியும், பவித்திரன் (4) மகனும் உள்ளனர். முருகானந்தம் வெளிநாட்டில் இருப்பதால் அவரது பெற்றோர்களான ராமையன், சேதம்மாளுடன் மலர்விழி, அவரது பவித்ரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் ஒரத்தநாட்டில் உள்ள கோயிலுக்கு செல்வதாக கூறி முருகானந்ததின் பெற்றோர் சென்றுவிட்டனர். மலர்விழி மற்றும் மகன் பவித்திரன், அருகிலுள்ள சித்தப்பா வீட்டில் நேற்று முன்தினம் இரவு தங்கினர். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்களை உடைத்து 2 பவுன் நகை, லோன் கட்டுவதற்காக வைத்திருந்த ரூ. 50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ராமையன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரை தாக்கிய  சகோதரர்கள் கைது : தஞ்சை அடுத்த பள்ளியக்ரஹாரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சின்ராஜ் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன்கள் விஸ்வநாத் (29), கோபிநாத் (32) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சின்னராஜை சகோதரர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த சின்னராஜ், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சகோதரர்களை கைது செய்தனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு